வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

திட்டச்சேரியில் அமமுக பொதுக்கூட்டம்

DIN | Published: 22nd January 2019 08:02 AM

திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்,  எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளர் மோகன்காந்தி, மாவட்டத் துணைச் செயலாளர் சகுந்தலா மதியழகன், நாகை நகர்மன்றத் தலைவர் மஞ்சுளா சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் வரவேற்றார். கடலூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் அருள், புதுச்சேரி மாநிலச் செயலாளர் வேல்முருகன், பேச்சாளர் சோடா கண்ணன் ஆகியோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். பேரூராட்சி செயலாளர் முகமது அலி நன்றி கூறினார்.
 

More from the section

"தேர்தலுக்காக அல்ல, உங்கள் ஆறுதலுக்காக வந்தேன்'
ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் நெல் மகோத்ஸவம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுமா ?
நாகை, திருமருகலில் பிப்ரவரி 23 மின் நிறுத்தம்
வேதாரண்யேசுவரர் கோயிலில் தெப்பத் திருவிழா