வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

பேருந்து மோதி தொழிலாளி பலி

DIN | Published: 22nd January 2019 08:02 AM

மயிலாடுதுறையில் அரசு விரைவுப் பேருந்து மோதியதில், தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம், நரசிங்கம்பேட்டை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (58). இவர் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர்க் கடையில் வேலை பார்த்து வந்தார். திங்கள்கிழமை காலை வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, பெங்களூருவிலிருந்து மயிலாடுதுறைக்கு வந்த அரசு விரைவுப் பேருந்தை அதன் ஓட்டுநர் பின்னோக்கி நகர்த்தியபோது, அதன் சக்கரத்தில் சிக்கி பன்னீர்செல்வம் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, ஓட்டுநர் ஜெயச்சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
 

More from the section

"தேர்தலுக்காக அல்ல, உங்கள் ஆறுதலுக்காக வந்தேன்'
ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் நெல் மகோத்ஸவம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுமா ?
நாகை, திருமருகலில் பிப்ரவரி 23 மின் நிறுத்தம்
வேதாரண்யேசுவரர் கோயிலில் தெப்பத் திருவிழா