வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

கல்யாண ரெங்கநாதப் பெருமாள் திருக்கல்யாணம்

DIN | Published: 21st March 2019 09:14 AM

சீர்காழியை அடுத்த திருவாலியில் கல்யாண ரெங்கநாத பெருமாள்- அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் உத்ஸவம் மார்ச் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க கல்யாண ரெங்கநாதப் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, திருநகரியிலிருந்து அமிர்தவல்லி தாயாருடன் கல்யாண ரெங்கநாதப் பெருமாள் திருவாலி லெட்சுமிநரசிம்ம பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளினார்.
அங்கு பெருமாள்- தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் நடைபெற்று மணமேடையில் பெருமாள்- தாயார் எழுந்தருளினர். சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, திருமண வைபவம், சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க தாயார் கழுத்தில் மங்கலநாணை பட்டாச்சாரியார்கள் அணிவித்து திருக்கல்யாணம் செய்து வைத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

More from the section


வாக்களித்துவிட்டு வந்த மூதாட்டி வீட்டின் மேற்கூரை இடிந்து பலி

ஐயாறப்பர் கோயில் தேரோட்டம்
வாக்குச்சாவடி இடமாற்றம்: வாக்குப் பதிவு புறக்கணிப்பு
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு: தொடக்கத்தில் தாமதம்;நிறைவில் விறுவிறுப்பு
அமைச்சர் வாக்களித்தபோது பழுதான இயந்திரம்