வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

கல்லூரியில் தொழில் முனைவு உணவுத் திருவிழா

DIN | Published: 21st March 2019 09:15 AM

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தொழில் முனைவு உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வணிக மேலாண்மைத் துறை சார்பில், இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில், முற்றிலும் மாணவர்களே உணவு தயார் செய்து விற்பனை செய்யும் வகையில் இத்திருவிழா நடைபெற்றது.
 கல்லூரி செயலர் மா.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சி.சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கருணா. சேகர் விழாவைத் தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை சுயநிதிப்பிரிவு பொறுப்பாசிரியர் கோ.செளந்தரராஜன், துறைத் தலைவர் ஜி.திலகா, உதவிப் பேராசிரியர்கள் கே.சித்ரா, எஸ்.கார்த்திக், பி.எஸ்.காயத்ரி மற்றும் துறை மாணவர்கள் செய்திருந்தனர்.

More from the section


வாக்களித்துவிட்டு வந்த மூதாட்டி வீட்டின் மேற்கூரை இடிந்து பலி

ஐயாறப்பர் கோயில் தேரோட்டம்
வாக்குச்சாவடி இடமாற்றம்: வாக்குப் பதிவு புறக்கணிப்பு
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு: தொடக்கத்தில் தாமதம்;நிறைவில் விறுவிறுப்பு
அமைச்சர் வாக்களித்தபோது பழுதான இயந்திரம்