வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

மக்கள் நீதி மய்ய நாகை வேட்பாளர் க. குருவையா

DIN | Published: 21st March 2019 09:16 AM

நாகை மக்களவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக, ஓய்வு பெற்ற நீதிபதி க. குருவையா அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரது வாழ்க்கைக் குறிப்பு: 
பெயர்     :  க. குருவையா
பிறந்த ஆண்டு    : 1958
பிறந்த ஊர்    :  கம்பத்துப்பட்டி, 
             திருவில்லிப்புத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம். 
பெற்றோர்    : தி. கருப்பையா - க. குருவம்மாள்.
குடும்பம்    : மனைவி, ஒரு மகன்
கல்வித் தகுதி    : பி.எஸ்.சி, பி.எல்.
வகித்த பதவிகள்    : 14 ஆண்டுகள் வழக்குரைஞர். 1998 முதல் 2018-ஆம் ஆண்டு வரை நீதிபதி. 2015- 17-ஆம் ஆண்டு வரை மதுரை மாவட்ட நீதிபதி (சிபிஐ வழக்குகள் மற்றும் மகிளா நீதிமன்றம்).  அரசியல் அனுபவம் : அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு வழக்குரைஞர், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர், அதிமுக மாவட்ட வழக்குரைஞர் பிரிவு துணைத் தலைவர் மற்றும் மாநிலச் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர் பதவிகளை ஏற்கெனவே வகித்தவர்.   பணி ஓய்வுக்குப் பின்னர், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தவர்.  இந்தத் தகவலை மக்கள் நீதி மய்ய நாகை மாவட்ட (தெற்கு) பொறுப்பாளர் அனஸ் தெரிவித்தார்.

More from the section


வாக்களித்துவிட்டு வந்த மூதாட்டி வீட்டின் மேற்கூரை இடிந்து பலி

ஐயாறப்பர் கோயில் தேரோட்டம்
வாக்குச்சாவடி இடமாற்றம்: வாக்குப் பதிவு புறக்கணிப்பு
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு: தொடக்கத்தில் தாமதம்;நிறைவில் விறுவிறுப்பு
அமைச்சர் வாக்களித்தபோது பழுதான இயந்திரம்