21 ஏப்ரல் 2019

பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

DIN | Published: 22nd March 2019 09:31 AM

சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை பங்குனி உத்திர சேர்த்தி சேவை மற்றும் திருக்கல்யாண  உத்ஸவம் நடைபெற்றது.
திருநாங்கூரில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாராயணப் பெருமாள் கோயில் மணிமாடக் கோயில் என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை மறுநாள் இரவு 11 பெருமாள் கோயில் உத்ஸவர்கள் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருள்வர். பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. 
முன்னதாக, புண்டரிகவல்லிதாயார் நாராயணப் பெருமாள் சன்னிதியில் எழுந்தருளினார். அங்கு பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, திருக்கல்யாண வைபவ சடங்குகள் செய்யப்பட்டு பட்டாச்சாரியார்களால் பெருமாள்-தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

More from the section

வேளாங்கண்ணியில் புனித ஈஸ்டர் திருவிழிப்பு சிறப்பு வழிபாடு: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
அமமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனை
மின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு