24 பிப்ரவரி 2019

டி.என்.சி.எஸ்.சி ஓய்வுபெற்ற பணியாளர்கள் முழக்கப் போராட்டம்

DIN | Published: 12th September 2018 06:45 AM

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் சங்கத்தினர் (டி.என்.சி.எஸ்.சி), ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
வ.உ.சி. சாலையில் உள்ள மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ. குணசேகரன் தலைமை வகித்தார். 
ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.6,500 வழங்க வேண்டும். பணிக்கொடை வழக்குகள் தீர்ப்புப்படி, பணிக்கொடையை உடனடியாக வழங்க வேண்டும். இழப்பை நிர்ணயிப்பதில் சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும். இழப்பைக் காரணம் காட்டி, ஓய்வு காலப்பயன்களை நிறுத்தி வைக்கக் கூடாது. ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தைத் தாமதமின்றி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிடப்பட்டது.
போராட்டத்தை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான வை. சிவபுண்ணியம் தொடங்கி வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை. செல்வராஜ், ஓய்வுபெற்ற பணியாளர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருவாரூர் என்.புண்ணீஸ்வரன், தஞ்சை தி. கோவிந்தராஜன், நாகை எஸ். தண்டபாணி ஆகியோர் கோரிக்கைளை விளக்கிப் பேசினர்.
இதில், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சி. சந்திரகுமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். ஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர். சந்திரசேகர ஆசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More from the section

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு
ஏவுகணை மாதிரியை பறக்கவிட்டு மாணவர்கள் சாதனை
ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு
நல்ல சிந்தனைகளை மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்: கவிஞர் விவேகா
இன்று விவசாயிகள் வெகுமதி திட்டம் தொடக்கம்: பிரதமரின் உரை நேரடி ஒளிபரப்பு