20 ஜனவரி 2019

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை தாக்க முயற்சி

DIN | Published: 12th September 2018 01:01 AM

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தன்னை சிலர் தாக்க முற்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் தெரிவித்தார். 
இந்தச் சம்பவம் தொடர்பான விடியோ வெளியாகியது. அதில், கருப்பு உடை அணிந்து சிலர் சஞ்சய் சிங்குக்கு கருப்புக் கொடிகளைக் காட்டி அவரது காரை நிறுத்துவதைப்போல் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம்  செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, எனது காரை சிலர் வழிமறித்து தாக்கினர். காரின் கதவைத் திறந்து அவர்கள் என்னையும் தாக்க முற்பட்டனர். அதற்குள் அங்கிருந்த காவலர்கள் அவர்களை துறத்திவிட்டு, எனது காருக்கு வழி ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.
எஸ்சி, எஸ்டி சட்டத்தில் அண்மையில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக மத்தியப் பிரதேச மாநிலத்தில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை எங்கள் மீது திருப்பிவிட சதி நடந்துள்ளது' என்றார். எனினும், இந்தச் சம்பவத்தில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. 230 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு பிரசாரம் தொடங்கியுள்ளது.

More from the section

ரூ.24 கோடி ஹெராயின் பறிமுதல்: இருவர் கைது 
பாஜக இளைஞர் அணி சார்பில் இன்று பேரணி
தெற்கு தில்லியில் இறைச்சிக் கடைகளுக்கு கட்டுப்பாடு
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபட்டுவிடும்: கேஜரிவால்
காற்றின் தரக் குறியீட்டை அறியாதவர்கள் 93% பேர்!