திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

தில்லியில் புழுக்கம் அதிகரிப்பு!

DIN | Published: 12th September 2018 01:07 AM

தலைநகர் தில்லியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது.இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
தில்லியில் கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால், சாலைகளில் மழை நீர் தேங்கி அவ்வப்போது போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை ஏதும் பெய்யவில்லை. 
செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை நிலவரப்படி காற்றில் ஈரப்பதத்தின் அளவு 67 - 87 சதவீதம் என்ற அளவில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இதனால், புழுக்கத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட ஒரு டிகிரி உயர்ந்து 26 டிகிரி செல்சியஸாக இருந்தது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் மழை ஏதும் பதிவாகவில்லை. 
முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே இடி, மின்னல் இருக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அதேபோல வியாழன் முதல் திங்கள் வரையிலான காலத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

More from the section

விவசாய கிணற்றில் பெண் சடலம் 
கார் விபத்தில் தொழிலதிபர் பலி
சகோதரி மானபங்கம்: நண்பரை குத்திக் கொன்ற இளைஞர் போலீஸில் சரண்
பெண் சடலம் கண்டெடுப்பு
குடியுரிமை திருத்த மசோதாவால்பாகிஸ்தானியருக்கே அதிக பயன்: மத்திய உள்துறை அமைச்சகம்