திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

நாகர்கோவிலில் இன்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

DIN | Published: 16th December 2018 01:03 AM


நாகர்கோவில் நகர அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.16) நடைபெறுகிறது.
இது குறித்து நகரச் செயலர் ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகர்கோவில் நகர அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் செட்டிகுளம் சந்திப்பில் உள்ள கிருஷ்ண
மகாலில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு நான் (ஜெயச்சந்திரன்) தலைமை வகிக்கிறேன். நகர அவைத்தலைவர் எஸ்.ஏ. விக்ரமன் வரவேற்கிறார். இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தமிழகஅரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின்செல்வராஜ், குமரி கிழக்கு மாவட்டச் செயலர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்டச் செயலர் ஜான்தங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பேசுகின்றனர். இக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், செயல் வீரர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

 

More from the section

ஜன. 26இல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்
கல்லூரி மாணவியிடம் நகை திருட்டு
குலசேகரத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
கொட்டாரம் முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
ஆதிவாசிகள் மகாசபை பொதுக்கூட்டம்