திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

நித்திரவிளை, மார்த்தாண்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியை, மூதாட்டியை தாக்கி 11.5 பவுன் நகை பறிப்பு

DIN | Published: 16th December 2018 01:03 AM

 

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை, மார்த்தாண்டம் பகுதியில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களில், ஓய்வுபெற்ற ஆசிரியை மற்றும் மூதாட்டியை தாக்கி 11.5 பவுன்
தங்கச் சங்கிலியை சனிக்கிழமை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
நித்திரவிளை அருகேயுள்ள ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்தாச்சி (70). ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர் அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள், அவரது வீட்டின் கதவை தட்டி, குடிக்க தண்ணீர் கேட்டனராம். அவர் தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டு, வீட்டின் பின்பக்கம் சென்றாராம்.
அப்போது, வீட்டின் சுற்றுச்சுவர் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அவர்கள், முத்தாச்சியை தாக்கி, அவர் அணிந்திருந்த 8.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
மற்றொரு சம்பவம்: மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் மனைவி மேரி (65). இவர், வீட்டுக்கு அருகேயுள்ள பொது குடிநீர் தொட்டியில் சனிக்கிழமை தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மேரி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் நித்திரவிளை மற்றும் மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

More from the section

ஜன. 26இல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்
கல்லூரி மாணவியிடம் நகை திருட்டு
குலசேகரத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
திருவட்டாறு அருகே மலைக் குன்றில் தீ விபத்து
அருமனையில் கலாசார ஊர்வலம்