திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்

DIN | Published: 16th December 2018 01:03 AM


மத்திய அரசு பொதுமக்களுக்காக நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்து பாஜகவினர் நடுத்தர மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட பாஜக தொகுதி மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் பிரதமர் பேசும் நிகழ்ச்சி நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், நடுத்தர மக்களிடம் நாம் எப்படி பிரசாரம் மேற்கொள்வது என்று பிரதமரிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த பிரதமர், நாட்டில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும், காப்பீட்டுத் திட்டம், கடன் உதவித் திட்டங்கள், பிரதமர் வீடுகட்டும் திட்டம் உள்ளிட்டவை குறித்து அனைத்து மக்களிடமும் எடுத்துக் கூறுங்கள். இந்த பிரசாரமே நமக்கு வெற்றியை தேடித்தரும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாவட்ட பாஜக நிர்வாகிகள் முத்துராமன், வேல்பாண்டியன், தேவ், கணேசன், தங்கப்பன், கிருஷ்ணகுமார், மீனாதேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More from the section

ஜன. 26இல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்
கல்லூரி மாணவியிடம் நகை திருட்டு
குலசேகரத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
கொட்டாரம் முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
ஆதிவாசிகள் மகாசபை பொதுக்கூட்டம்