திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

மீன் கழிவுகளை ஏற்றி வந்த ஓட்டுநர் கைது

DIN | Published: 16th December 2018 01:02 AM


புதுக்கடை அருகே மீன் கழிவுகளை ஏற்றி வந்த வேன் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
கேரளத்திலிருந்து இறைச்சி, மீன் கழிவுகளை களியக்காவிளை வழியாக, குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு, சாலையோரங்கள், நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதிகளில் கொட்டப்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து தொடர் புகார்கள் வந்ததை அடுத்து, இறைச்சி கழிவுகளை ஏற்றி வரும் லாரி, ஓட்டுநர்களை மாவட்ட போலீஸார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேந்திரன் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேங்காய்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வேகமாக வந்த வேனில் இருந்து துர்நாற்றம் வீசியதாம். இதையடுத்து, போலீஸார் அந்த வாகனத்தை மடக்கி, சோதனை செய்த போது, அதில் மீன் கழிவுகள் ஏற்றி வந்ததை கண்டறிந்தனர்.
அதன்பின்னர் வேனை ஓட்டி வந்த கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜனை (37) போலீஸார் கைது செய்தனர். மேலும் மீன் கழிவுகளை ஏற்றி வந்த வேனை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

More from the section

ஜன. 26இல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்
கல்லூரி மாணவியிடம் நகை திருட்டு
குலசேகரத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
கொட்டாரம் முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
ஆதிவாசிகள் மகாசபை பொதுக்கூட்டம்