வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

அகில இந்திய ஈட்டி எறிதல் போட்டி:  குமரி மாணவர் வெள்ளி வென்று சாதனை

DIN | Published: 11th September 2018 08:14 AM

அகில இந்திய அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் குமரி  மாவட்ட மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 
உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் அகில இந்திய அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். நாகர்கோவில், தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியைச் சேர்ந்த பிரேவ்மன் ஹார்ட் என்ற மாணவர் 20 வயதுக்குள்பட்டோருக்கான அகில இந்திய ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டார். இதில், அவர் 66.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர், ஏற்கெனவே முதல்வர் கோப்பை போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from the section

பேரூராட்சி உதவி செயற்பொறியாளரின் வங்கி லாக்கர்களிலிருந்து 250 பவுன் நகைகள், ரூ.7.50 லட்சம் பறிமுதல்
முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரதாஸ் காலமானார்
குழித்துறையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம்
போலி மது பாட்டில்கள் கடத்தல்: கேரள இளைஞர் கைது


நாகர்கோவிலில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்