புதன்கிழமை 16 ஜனவரி 2019

சின்னமுட்டத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்

DIN | Published: 11th September 2018 08:12 AM

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து சின்னமுட்டம் மீனவர்கள் திங்கள்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக 275-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக தங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. துறைமுக வளாகம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள்: இதனிடையே சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் கடற்கரைப் பகுதி, சூரிய அஸ்தமனப் பூங்கா, சன்னதித் தெரு உள்ளிட்டப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

More from the section

குமரி அருகே சாலை விபத்து:  மாணவர் உள்பட இருவர் சாவு


வனத்துறை-காவல்துறை மோதல் சம்பவம்: உதவி வனப்பாதுகாவலர் உள்பட 14 பேர் மீது வழக்கு

நாகர்கோவில்-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்


நாகர்கோவிலில் விழிப்புணர்வுக் கருத்தரங்குநா

உதயகிரி கோட்டை கல்லறை தோட்டத்தில் அர்ச்சிப்பு விழா