வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

தக்கலை அருகே  மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ:  ரூ. 50 லட்சம் பொருள்கள் சேதம்

DIN | Published: 11th September 2018 08:11 AM

தக்கலை அருகே மெத்தை தயாரிப்பு ஆலையில் நேரிட்ட  தீ விபத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
தக்கலை அருகே ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின்ராஜ் (48). இவர் மேக்காமண்டபம் அருகே சாமிவிளை பகுதியில் மெத்தை தயாரிப்பு ஆலை வைத்துள்ளார். இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை முடிந்து தொழிலாளர்கள் வீடுதிரும்பினர். காவலாளி ஜெயச்சந்திரன் மட்டும் ஆலையில் இருந்தார்.
இந்த நிலையில், இரவு 8 மணியளவில் ஆலையிலிருந்து கரும்புகை வெளியேறியதோடு, சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காவலாளி ஜெயச்சந்திரன் தீயை அணைக்க முயன்றார். ஆனால், தீ மளமளவென பரவியது. இதையடுத்து, தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியாததால், குலசேகரம், குளச்சல் தீயணைப்பு நிலைய வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், ஆலையில் இருந்த பொருள்கள், மெத்தைகள், எந்திரங்கள் அனைத்தும் கருகி சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் என கூறப்படுகிறது. 
இதுகுறித்து ஆலை உரிமையாளர் ஜஸ்டின்ராஜ் தக்கலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

More from the section

மக்களவைத்  தேர்தல் பணி: விடியோகிராபர்களுக்கு அழைப்பு
குமரி மாவட்டத்தில் 15 இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம்


தேரூர் பேரூராட்சியில் இன்று சிறப்பு மனுநீதி திட்ட முகாம்

நாகர்கோவிலில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்


பிஎஸ்என்எல் ஊழியர்கள் 3 ஆவது நாளாக வேலைநிறுத்தம்