வியாழக்கிழமை 21 மார்ச் 2019

நாகர்கோவிலில் மக்கள் குறைதீர் முகாம்

DIN | Published: 11th September 2018 08:12 AM

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் (பொ)  இரா. ரேவதி தலைமையில் திங்கள்கிழமை  நடைபெற்றது.   
கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை,  பட்டா பெயர்மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை,  விதவை உதவித்தொகை  உள்ளிட்ட  பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 254 மனுக்கள்  பெறப்பட்டன. மனுக்களை  சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி,  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 
நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எஸ். கிறிஸ்டோபர் ஜெயராஜ் மற்றும் அனைத்துத்துறை அரசு  உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

More from the section

நாகர்கோவில் அருகே ஆசிரியை, மாணவிகளுக்கு தொல்லை: கல்லூரி நிர்வாகி உள்பட 3 பேர் கைது
மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள்


ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை குமரியில் வளர்க்க, விற்கத் தடை

மருத்துவ விழிப்புணர்வு முகாம்
குமரி மாவட்டத்தில் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்