புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

இரவிபுதூரில் இன்று முன்னோடி மனு நீதி நாள்

DIN | Published: 12th September 2018 09:20 AM

இரவிபுதூரில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (செப். 12)  நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் வட்டம், இரவிபுதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதித் திட்ட முகாமில் மனுக்கள் பெறும் முதல்கட்ட நிகழ்ச்சி  செப். 12ஆம் தேதி (புதன் கிழமை) காலை 10 மணி முதல் பிற்கபல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து  மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியரால் மனுக்கள் பெறப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, அப்பகுதி பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section

குமரி பகவதியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை: ரூ. 12.64 லட்சம் வசூல்
பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்


செல்லிடப்பேசி பயன்பாட்டால் குழந்தைகளின்
கற்பனைத் திறன், நினைவாற்றல் குறையும்: எழுத்தாளர் நாறும்பூநாதன்


விவசாயிகள் நிதியுதவித் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் தொடர்ந்து பெற்றுக் கொள்ளப்படும்: மாவட்ட ஆட்சியர்

காங்கிரஸ் சேவாதள நிர்வாகிகள் கூட்டம்