வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

காங்கிரஸ் சார்பில் அஞ்சலி ஊர்வலம்

DIN | Published: 19th February 2019 06:58 AM

காஷ்மீர் மாநிலத்தில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மார்த்தாண்டம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது. 
சாங்கை பகுதியிலுள்ள குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து சிராயன்குழி சந்திப்பு வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.  குளச்சல் பேரவை உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ், கட்சியின் மாவட்டச் செயலர் கே. பாலு,  மாவட்ட இணைச்செயலர் ஆல்பின் பிரைட், வட்டாரத் தலைவர்கள் என்.ஏ. குமார், கிறிஸ்டோபர், டென்னிஸ், காஸ்டன் கிளீட்டஸ், மாவட்ட மனித உரிமைத்துறை தலைவர் இ.ஜி. ரவிசங்கர், குழித்துறை நகரத் தலைவர் அருள்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் அங்கு வீரர்களின் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 


பேச்சிப்பாறை அருகே...
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பேச்சிப்பாறை அருகே அன்புநகர் குடியிருப்பில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் டாக்டர் பினுலால் சிங்  தலைமை வகித்தார். 
அன்புநகர் நகரத் தலைவர் ராமசந்திரன், துணைத் தலைவர் சுலேகா, கிள்ளியூர் வட்டாரத் தலைவர் டென்னிசன்,  மாவட்ட பொருளாளர் பரமானந்த ஞானதாஸ்  உள்ளிட்டோர் உயிரிழந்த வீரர்களின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

More from the section

நாகர்கோவிலில் இன்று பிஎஸ்என்எல் மறு இணைப்பு முகாம்
பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு களியக்காவிளையில் பயிற்சி
வேளிமலையில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
குலசேகரத்தில் அரசியல் கட்சிகொடிக்கம்பங்கள் அகற்றம்
வல்லன்குமாரன்விளையில் மார்ச் 23 மின்தடை