வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

நித்திரவிளை அருகே விபத்தில் மூவர் காயம்

DIN | Published: 19th February 2019 06:58 AM

நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
நித்திரவிளை பகுதியைச் சேர்ந்தவர் தோமஸ் மகன் சண்ணி (25).  அதேபகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் (26). இருவரும் மோட்டார் சைக்கிளில் நடைக்காவுலை நோக்கி சென்றனராம். அப்போது, கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சரவணன் (28), திருவனந்தபுரம் அருகே பாப்பனம்கோடு பகுதியைச் சேர்ந்த ஷிபு (28) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், காயமடைந்த சண்ணி, ரதீஷ், ஷிபு ஆகியோர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

More from the section

நாகர்கோவிலில் இன்று பிஎஸ்என்எல் மறு இணைப்பு முகாம்
பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு களியக்காவிளையில் பயிற்சி
வேளிமலையில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
குலசேகரத்தில் அரசியல் கட்சிகொடிக்கம்பங்கள் அகற்றம்
வல்லன்குமாரன்விளையில் மார்ச் 23 மின்தடை