24 மார்ச் 2019

மார்த்தாண்டம் அருகே  துணிக் கடையில் திருட்டு

DIN | Published: 19th February 2019 06:58 AM

மார்த்தாண்டம் அருகே துணிக் கடையில் பட்டுச் சேலைகளை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே உதச்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்லம் (52).  இவர், மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். திங்கள்கிழமை வழக்கம்போல கடையை திறந்தனர். கடையின் முதல் மாடி ஜன்னல் உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக் கிடந்தது தெரியவந்தது.
கட்டடத்தின் மொட்டை மாடியில் கதவு திறந்து இருந்தது. கடையில் பணம் எதுவும் கிடைக்காததால் பட்டுச் சேலைகள் மற்றும் விலை உயர்ந்த ஆடைகள், சிசிடிவி கேமராவில் காட்சிகளை பதிவு செய்து வைக்கும் ஹார்டு டிஸ்க் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
புகாரின்பேரில், மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, அருகில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from the section

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார்

வெளிநாட்டுப் பறவைகள்போல் வந்து செல்வோரை 
கன்னியாகுமரி தொகுதி மக்கள் ஏற்கமாட்டார்கள்

அழகியமண்டபத்தில் திமுக கூட்டத்தில் மோதல்
குமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும்: அமமுக வேட்பாளர் உறுதி
நடனக் கலைஞர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் சிறை