செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

குமரி திருப்பதி கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை: யாகசாலை பூஜை இன்று தொடக்கம்

DIN | Published: 22nd January 2019 08:19 AM

கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் 40 அடி உயரமுள்ள கொடிமரம் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22.50 கோடி செலவில் வெங்கடாசலபதி கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஜன. 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் 40 அடி உயரம் உள்ள கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. பிரதிஷ்டை மண்டபத்தில் நவதானியங்கள் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷம் எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திர துணைத் தலைவர் ஏ.பாலகிருஷ்ணன், பொருளாளர் அனுமந்த்ராவ், திருமலை திருப்பதி சென்னை தகவல் மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மோகன்ராவ், சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிமென்ட் கலவையால் கொடிமரம் உறுதிசெய்யப்பட்ட பின்னர் செம்புத்தகடு மூலம் கொடிமரம் பொதியப்படும் பணி தொடங்கியது.
யாகசாலை பூஜை: மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 22)  மாலை 6 மணிக்கு தொடங்கி தொடந்து 5 நாள்கள் நடைபெறும். ஜன. 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பின்னர், அன்றைய தினம் பிற்பகல் 12.30 மணிக்குமேல் தர்ம தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

More from the section

காங்கிரஸ் சார்பில் அஞ்சலி ஊர்வலம்
நித்திரவிளை அருகே விபத்தில் மூவர் காயம்


மார்த்தாண்டம் அருகே  துணிக் கடையில் திருட்டு

தேசிய தடகளப் போட்டி: வாவறை பள்ளி மாணவி சாதனை
ஜெயலலிதா பிறந்ததினம்: நல உதவிகள் வழங்க தோவாளை அதிமுக முடிவு