சனிக்கிழமை 20 ஜூலை 2019

திற்பரப்பு அருவியில்  மிதமான தண்ணீர்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

DIN | Published: 01st July 2019 07:38 AM

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாதபோதும் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.

மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை ஜூன் மாதம் 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில், குறிப்பிட்ட சில நாள்கள் தொடர்ந்து கன மழையாகப் பெய்தது. அதன் பிறகு மழை பெய்யாமல் வெயில் நிலவி வருகிறது. மழை பெய்தபோது திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துக் கொட்டியது. அதன் பிறகு மிதமான அளவில் கொட்டி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இந்த அருவிக்கு வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

More from the section

குழித்துறை வாவுபலி பொருள்காட்சி தொடக்கம்
தொழிலாளர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பளுதூக்கும் போட்டியில் வென்றமாணவிக்கு வரவேற்பு
குடிநீர் கிணற்றில் கலக்கும் மீன்சந்தை கழிவுநீரால் சுகாதாரக் கேடு: வர்த்தகர்கள் புகார்
களியக்காவிளை, கருங்கல் பகுதிகளில் மழை