வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ. 5.33 லட்சம் வழிப்பறி

DIN | Published: 19th March 2019 08:27 AM

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி, ரூ. 5.33 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடையில், எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த முருகன் (42) கண்காணிப்பாளராகவும், தாழக்குடியைச் சேர்ந்த புஷ்பராஜ், பழவூரைச் சேர்ந்த முனியாண்டி ஆகியோர் ஊழியர்களாகவும் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு கடையில் வசூலான பணம் ரூ. 5,33,880- ஐ எடுத்துக் கொண்டு முருகன் தனது பைக்கில் வீட்டுக்குச் சென்றார். அவருக்கு பின்னால் மற்றொரு பைக்கில் புஷ்பராஜும் சென்றார். குமாரபுரம் பகுதியை தாண்டி சென்றபோது, எதிரே பைக்கில் வந்த 3 பேர் முருகனை வழிமறித்து அரிவாளால் வெட்டியதோடு, அவர் வைத்திருந்த பணத்தையும், பைக்கையும் பறித்துச் சென்றனராம்.  சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த புஷ்பராஜ், பலத்த காயத்துடன் கிடந்த முருகனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து புஷ்பராஜ் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த ஆரல்வாய்மொழி போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதி சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் வழிப்பறி கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
 

More from the section


முதல்முறையாக வாக்களித்தது மகிழ்ச்சி: இளம் வாக்காளர்கள் பேட்டி


பேச்சிப்பாறை அணை வழியாக  படகில் வாக்களிக்க வந்த பழங்குடி மக்கள்

நகை, பணம் திருட்டு
மக்களவைத் தேர்தல் எதிரொலி: வெறிச்சோடியது குமரி
பத்மநாபபுரம் தொகுதியில்  அமைதியான முறையில்  வாக்குப் பதிவு