21 ஏப்ரல் 2019

குமரி மாவட்டத்தில் ரூ. 5.50 லட்சம்  பறிமுதல்

DIN | Published: 19th March 2019 08:26 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5.50 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை நடத்தப்பட்ட வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5.50 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 

More from the section

திருவட்டாறில் ஆதிகேசவப் பெருமாளுக்கு ஆறாட்டு
நாகர்கோவில் கட்டடப் பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள்தேர்வு
குமரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்களை உடனே பட்டியலில் சேர்க்க எம்எல்ஏ வலியுறுத்தல்
மலையாள பின்னணிப் பாடகர் கமுகற புருஷோத்தமன் பிறந்தநாள் விழா