வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

இமானுவேல் சேகரன் நினைவு நாள்

DIN | Published: 12th September 2018 09:37 AM

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ராஜேஷ்முருகன், மாவட்டச் செயலர் வி.பெருமாள், மலையாளமேடு கண்ணன், மண்டலத் தலைவர் எஸ்.எஸ்.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடிஆதித்தன் இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு,  முன்னாள் மாவட்டத் தலைவர் சுந்தரராஜபெருமாள், மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் பி.ஷேக்நாகூர்கனி,  நிர்வாகிகள் கே.சொக்கலிங்ககுமார்,  தனசிங்பாண்டியன்,  சுல்தான் இப்ராஹிம்,  ஐ.யப்பன்,  தருவை காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More from the section

நெல்லையப்பர் கோயிலில் "நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்'
1500 மதுபாட்டில்கள் பறிமுதல்
தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்
மாட்டுப் பொங்கல்: உற்சாக கொண்டாட்டம்
"ஜன.20 இல் சத்ய நாராயண பூஜை'