புதன்கிழமை 16 ஜனவரி 2019

பாரதியார் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN | Published: 12th September 2018 09:40 AM

பாரதியார் நினைவு நாளையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ளஅவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதியார் திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற வகுப்பறை நாற்றங்கால் என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு மகாகவியை நினைவூட்டும் ஓவியங்கள் உள்ளன. அந்த வகுப்பறையில் மாணவர்-மாணவிகள் கல்வியில் சிறப்படைந்து நாட்டைக் காக்கும் உறுதிமொழியை செவ்வாய்க்கிழமை ஏற்றனர். பின்னர் பாரதியாரின் சிறப்புகள், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்த பாரதியின் கவிதைகள் குறித்து விளக்கப்பட்டது. பள்ளி நிர்வாகிகள், மாணவர்-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். 
பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியார் சிலைக்கு சங்கத் தலைவர் கவிஞர் பே.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்க உறுப்பினர்கள் சுப்பையா, கோபால், ஜெயக்குமார், குருநாச்சி, சடகோபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ், பிராமணர் சங்கம், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்-மாணவிகள் பாரதியார் போல வேடமணிந்து வந்து சிலை முன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

More from the section


சுரண்டை கோயிலில் மார்கழி மாத பஜனை நிறைவு

நெல்லையில் முன்னாள் எம்எல்ஏ சோமையாஜுலுவுக்கு அஞ்சலி

பாளை. சிறையில் கைதிகள் விளைவித்த கரும்பு, சிறுகிழங்கு
: பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை

நெகிழிக்கு தடை எதிரொலி: ஓலைப் பெட்டி முடையும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?
தெற்குகள்ளிகுளம் பள்ளியில் 350 பேருக்கு விலையில்லா சைக்கிள்