புதன்கிழமை 16 ஜனவரி 2019

பெண்ணிடம் நகை பறிப்பு

DIN | Published: 12th September 2018 09:39 AM

திருநெல்வேலி அருகே கடைக்கு சென்ற தனியார் பள்ளி நிர்வாகி மனைவியிடம், 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி அருகே கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (55). இவர், மேலப்பாளையத்தில் தனியார் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (50). இவர், வீட்டு அருகே உள்ள கடையில் பொருள்கள் வாங்குவதற்காக நடந்து சென்றாராம். அப்போது, அவ்வழியாக தலைக்கவசம் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் தமிழ்ச்செல்வி அணிந்திருந்த 7.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.
புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

More from the section


சுரண்டை கோயிலில் மார்கழி மாத பஜனை நிறைவு

நெல்லையில் முன்னாள் எம்எல்ஏ சோமையாஜுலுவுக்கு அஞ்சலி

பாளை. சிறையில் கைதிகள் விளைவித்த கரும்பு, சிறுகிழங்கு
: பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை

நெகிழிக்கு தடை எதிரொலி: ஓலைப் பெட்டி முடையும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?
தெற்குகள்ளிகுளம் பள்ளியில் 350 பேருக்கு விலையில்லா சைக்கிள்