வியாழக்கிழமை 21 மார்ச் 2019

ரயில் மோதி காயமடைந்த இளைஞர் சாவு

DIN | Published: 12th September 2018 09:38 AM

திருநெல்வேலியில் ரயில் மோதி காயமடைந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பழனிசாமி மகன் கண்ணதாசன் (35). திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வந்த இவர், மூன்றாவது நடைமேடையில் இருந்து நான்காவது நடைமேடைக்கு கடக்க முயன்றபோது திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கண்ணதாசனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

More from the section


பாளையங்கோட்டையில் ராமாயணத் தொடர் சொற்பொழிவு


நெல்லையப்பர் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா

நெல்லை அமமுக  வேட்பாளர் மீது வழக்கு
பழையபேட்டையில் 500 சேலைகள் பறிமுதல்

முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் வாக்குச்சீட்டு படிவம்
தேவை: தேர்தல் ஆணையத்திற்கு ஆசிரியர்கள் மனு