வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

உலகத் திறனாய்வு போட்டிகள்: 624 மாணவர்கள் பங்கேற்பு

DIN | Published: 15th February 2019 07:54 AM

பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி கல்வி மாவட்ட அளவிலான உலகத்திறனாய்வுப் போட்டியில் 624 மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில் உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ்,  கல்வி மாவட்ட அளவில் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி கல்வி மாவட்டப் போட்டிகளில் 31 பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 258 பேர், மாணவர்கள் 366 பேர் என மொத்தம் 624 பேர் பங்கேற்றனர். 
இப்போட்டியினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலலர் அ.ஜெயசித்ரா தொடங்கி வகித்தார். நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் பிலீப் மற்றும் குமார், காயிதமில்லத் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஜாய்மரகதம், பால்பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

More from the section


பாளையங்கோட்டையில் ராமாயணத் தொடர் சொற்பொழிவு


நெல்லையப்பர் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா

நெல்லை அமமுக  வேட்பாளர் மீது வழக்கு
பழையபேட்டையில் 500 சேலைகள் பறிமுதல்

முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் வாக்குச்சீட்டு படிவம்
தேவை: தேர்தல் ஆணையத்திற்கு ஆசிரியர்கள் மனு