வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

ஏர்வாடி அரசு மருத்துவமனைக்கு இ.சி.ஜி இயந்திரம் அளிப்பு

DIN | Published: 15th February 2019 07:55 AM

ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு லைலா ரைஸ்மில் அப்துல் மஜித் அறக்கட்டளை சார்பில் இ.சி.ஜி. இயந்திரம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அரசு ஆரம்ப சுகாதர நிலையத்துக்கு ஏர்வாடி வளர்ச்சி மன்றம், திருக்குறுங்குடி டி.வி.எஸ்.சீனிவாசன் அறக்கட்டளை,  சிட்டி கோல்டு முஸ்தபா இமான் சங்கம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் வளர்மதி மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலை வசதி, சுற்றுச்சுவர், கர்ப்பிணிப் பெண்கள் அமருமிடம் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள இ.சி.ஜி. இயந்திரம் செயலிழந்ததை அடுத்து, லைலா அரிசி ஆலை அப்துல் மஜித் அறக்கட்டளை நிர்வாகி ரிஸ்வான் சார்பில் இ.சி.ஜி இயந்திரம் மருத்துவர் பிரியதர்ஷினியிடம் வழங்கப் பட்டது. இதில், டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளையின் களஇயக்குநர் முருகன், வளர்ச்சி மன்றத் தலைவர் அபூபக்கர், செயலர் அண்ணாவி உதுமான், பொருளாளர் எம். சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரிவாக்கக் கட்டடம் மற்றும் கூடுதல் வசதிகளை ஏர்வாடி வளர்ச்சி மன்றம் சார்பில் நிறைவேற்றப்படும் என அமைப்பின் நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

More from the section

பொன்னாக்குடியில் விபத்து: காயமடைந்தவர் சாவு
சங்கரன்கோவில் அருகே  ஆண் சடலம் மீட்பு


கிணற்றில் மூழ்கி நண்பர்கள் இருவர் சாவு

சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
சின்னங்கள் வராததால் சுயேச்சை வேட்பாளர்கள் தவிப்பு!