24 மார்ச் 2019

"குரூப் 2 தேர்வு: ராமநாதபுரத்தில் நாளைஇலவச முதன்மை மாதிரித் தேர்வு'

DIN | Published: 15th February 2019 07:54 AM

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வுக்கான இலவச முதன்மை மாதிரித் தேர்வு, சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் ராமநாதபுரத்தில்  சனிக்கிழமை (பிப். 16) நடைபெறவுள்ளது.  
இது தொடர்பாக சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச முதன்மை மாதிரித் தேர்வு சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் ராமநாதபுரம் மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ளவர்களும் பங்கேற்கலாம்.
பங்கேற்கும் அனைவருக்கும் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் இலவச பாடக்குறிப்புகள், நடப்பு நிகழ்வுகள், விரிவான விளக்கங்களுடன் விடைகள் இலவசமாக வழங்கப்படும். பங்கேற்க வரும்போது ஹால் டிக்கெட், 2 புகைப்படங்களுடன் வர வேண்டும். தேர்வில் பங்கேற்க முன்பதிவு அவசியம். 
வெளி மாவட்டங்களிலிருந்து வருவோருக்கு இலவச விடுதி வசதி செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 75503 52916, 75503 52917 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 

More from the section

களைகட்டாத தேர்தல் பிரசாரம்!
குற்றாலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு
பாளை. சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
தவறான மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு
நெல்லையில் தொழிலாளி தற்கொலை