24 மார்ச் 2019

பாபநாசம் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

DIN | Published: 15th February 2019 07:55 AM

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில், தமிழ்த் துறை சார்பில் இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையேயான உறவு குறித்த சிறப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் சு. சுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்த் துறைப் பேராசிரியர் கோ. விஜயா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக இலங்கை தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் முருகு தயாநிதி கலந்துகொண்டு இலங்கையின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம், அரசியல், சமூகம், தமிழ்மொழியின் சிறப்பு, தமிழ்மொழி வளர்ச்சி, இந்திய - இலங்கை நாடுகளின் உறவு ஆகியவை குறித்து கருத்துரையாற்றினார். கல்லூரி நிர்வாக அதிகாரி ரா. நடராஜன் சிறப்பு விருந்தினருக்கு விருது வழங்கினார். நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பேராசிரியர் ரா. இந்துபாலா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரித் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் அ. பாக்கியமுத்து செய்திருந்தார்.

More from the section

களைகட்டாத தேர்தல் பிரசாரம்!
குற்றாலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு
பாளை. சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
தவறான மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு
நெல்லையில் தொழிலாளி தற்கொலை