24 மார்ச் 2019

7 பேர் விடுதலை விவகாரம்: மக்களவை தேர்தலுக்கு முன் தீர்வு கிடைக்கும்: அற்புதம்மாள் நம்பிக்கை

DIN | Published: 15th February 2019 07:54 AM

மக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரின் விடுதலை தொடர்பாக நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட  7 பேரை விடுதலை செய்யக் கோரி  பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து வருகிறார்.
திருநெல்வேலியில் மக்களைச் சந்திக்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், அற்புதம்மாள் கலந்துகொண்டு 7 பேரின் விடுதலை குறித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 7 பேரையும் விடுதலை செய்வது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொள்கை முடிவு எடுத்தார். பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு இடையில் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் மாநில அரசின் முடிவுக்கு விட்டுவிட்டது. அவர்கள் விடுதலை தொடர்பான  கோப்புகள் ஆளுநர் மாளிக்கைக்கு வந்து 5 மாதங்களுக்கு மேலாகிவிட்டது.
இதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். ஆளுரை வற்புறுத்த சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே நான் மக்களை சந்திக்கப் புறப்பட்டுவிட்டேன்.
28 ஆண்டுகாலம் சிறையில் இருக்கும் அவர்களின் வாழ்க்கை அழிந்துவிட்டது. இனிமேலாவது அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் கையெழுத்திட வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு 7 பேரின் விடுதலை குறித்து நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
 

More from the section

களைகட்டாத தேர்தல் பிரசாரம்!
குற்றாலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு
பாளை. சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
தவறான மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு
நெல்லையில் தொழிலாளி தற்கொலை