20 ஜனவரி 2019

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்துக்கு சுத்தம் செய்யும் இயந்திரம் அளிப்பு

DIN | Published: 11th September 2018 08:05 AM

தூத்துக்குடி வஉசி துறைமுகம் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்துக்கு சுத்தம் செய்யும் இயந்திரம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் பெருநிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ், மாநகராட்சி நிர்வாகத்துக்கு சுத்தம் செய்யும் இயந்திர வாகனம் வழங்கப்பட்டது. அந்த இயந்திரத்தை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ரிங்கேஷ் ராய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்,  துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நா. வையாபுரி, மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், சார் ஆட்சியர் எம்.எஸ். பிராந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ரிங்கேஷ் ராய் கூறியது: ஆண்டுதோறும் துறைமுகத்தின் நிகரலாபத்தில் 2 சதவீதம் சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கி கல்வி, மருத்துவம், தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகள், சுகாதார உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு தொழில் பயிற்சி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 மேலும், வஉசி துறைமுகம் 2018-19 ஆம் நிதியாண்டு சமூக நலத்திட்டங்களுக்காக ரூ. 2.47 கோடி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாநகரத்தை சுத்தப்படுத்துவதற்கு தேவையான சுத்தப்படுத்தும் இயந்திர வாகனம் ரூ. 49.11 லட்சம் மதிப்பில் பெரு நிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
 இந்த சுத்தம் செய்யும் இயந்திரத்தின் சிறப்பம்சமாக 3 தூரிகைகள் கொண்டு 3 மீட்டர் பரப்புள்ள சாலையினை சுத்தப்படுத்த முடியும். மேலும் இந்த சுத்தப்படுத்தும் இயந்திரத்தில் தூசி மற்றும் குப்பையினை சேகரிப்பதற்கு வசதியாக 6 கன மீட்டர் திறன் கொண்ட பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

More from the section

கோவில்பட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பக்தர் சாவு
பொத்தகாலன்விளையில்திருக்கல்யாண மாதா கெபி திறப்பு
மாநில சிலம்பம்: தூத்துக்குடி அணி முதலிடம்
பேய்க்குளம் அருகே தடுப்பணைகள் சேதம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்