புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

பேருந்து மோதி மீனவர் சாவு

DIN | Published: 11th September 2018 08:09 AM

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மீனவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி இனிகோ நகரைச் சேர்ந்தவர் போஸ்கோ மகன் கௌதம் (24). புதியம்புத்தூர் நயினார்குளம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் நந்தகுமார் (18). மீனவர்களான இவர்கள், திங்கள்கிழமை காலை தனித்தனியே தங்களது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி கடற்கரை சாலையில் மீன்பிடி துறைமுகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி அனல் மின்நிலைய கேம்ப்-2 குடியிருப்பு பகுதியில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கிச் சென்ற அனல் மின்நிலையப் பேருந்து இந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. 
இதில், மீனவர் கௌதம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த நந்தகுமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

More from the section

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற பரிசீலனை

காஷ்மீரில் வீரமரணமடைந்த சுப்பிரமணியனுக்கு
சிலை, மண்டபம் அமைக்க வேண்டும்: வைகோ

தூத்துக்குடி திருநங்கை கொலை வழக்கு: விளாத்திகுளம் நீதிமன்றத்தில் இளைஞர் சரண்
தூத்துக்குடியில் ரூ. 58.65 லட்சம் நலத்திட்ட உதவி அளிப்பு
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் கருடசேவை