புதன்கிழமை 16 ஜனவரி 2019

27 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனம் அளிப்பு

DIN | Published: 11th September 2018 08:06 AM

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 27 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.93 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட  ஸ்கூட்டர்களை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், விளாத்திக்குளம் வட்டம், காடல்குடி கிராமத்தில் உள்ள குப்பையாபிள்ளை ஊரணியில் கணேஷ்குமார், கவின்குமார், கவுதம் ஆகிய 3 பேர் நீரில் மூழ்கி இறந்த நிலையில், அவர்களின் பெற்றோரிடம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், சிவகளை கிராமத்தில் கல்குவாரி நீரில் மூழ்கி இறந்த முத்துமாரியின் தந்தையிடம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார். மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 14 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும் வழங்கப்பட்டன.
17 பேருக்கு வேலைவாய்ப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் பணியாற்றி வேலையிழந்த 5 பேருக்கு கோஸ்டல் எனர்ஜன் நிறுவனத்தின் மூலம் பணி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான நியமன கடிதத்தை ஆட்சியர்  வழங்கினார்.  இதுவரை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு உதவி திட்டத்தின் கீழ், 22 நபர்களுக்கு  தனியார் நிறுவனத்தில் பணிபுரிய, பணி நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் தமிழ்செல்வி, மாற்றுத்திறானாளிகள் நல அலுவலர் எம்.ஜெயசீலி, துணை ஆட்சியர் (பயிற்சி) முத்து மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from the section

குரும்பூர் அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு


பொங்கல் விடுமுறை தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு


பெருங்குளத்தில் நாளை செங்கோல் ஆதீன குருபூஜை விழா

தூத்துக்குடியில் 10 வாகனங்களின் கண்ணாடி உடைப்பு
பாட்டக்கரை கோயிலில் இன்று பொங்கல் விழா