புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு திமுக நிதியுதவி

DIN | Published: 12th September 2018 09:23 AM

திமுக தலைவர் மு.கருணாநிதி மரணமடைந்த செய்தியை அறிந்து, அதிர்ச்சியில் இறந்த சாத்தான்குளம் தொழிலாளியின் குடும்பத்துக்கு திமுக சார்பில்  ரூ. 2 லட்சம் நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சாத்தான்குளம்  அருகே உள்ள  கடாட்சபுரத்தைச் சேர்ந்தவர்  திமுக தொண்டர் எட்வின்தனராஜ்.  கருணாநிதியின்  இறந்த செய்தியை கேட்ட அவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.  அவருக்கு,  திமுக தலைமைக் கழகம் சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. 
இந்த நிதியை  எட்வின்தனராஜ் மனைவி அமுதாஷீலாவிடம்  தலைமைக் கழகம் சார்பில் ரூ. 2 லட்சத்துக்கான  காசோலையை தூத்துக்குடி தெற்கு  மாவட்ட திமுக செயலர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ  செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,  ஒன்றிய திமுக செயலர்கள் சாத்தான்குளம்  ஆ.செ. ஜோசப் உடன்குடி பாலசிங் , சாத்தான்குளம் நகரச்செயலர்  மகா. இளங்கோ,  வழக்குரைஞர் கிருபா,  மாவட்டஇளைஞரணி துணைஅமைப்பாளர் ராமஜெயம், நெசவாளர்அணி மாவட்ட அமைப்பாளர் மகாவிஷ்ணு மாவட்டப்பிரதிநிதி லெ.சரவணன் , மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சந்தையடியூர் ரவி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

More from the section

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற பரிசீலனை

காஷ்மீரில் வீரமரணமடைந்த சுப்பிரமணியனுக்கு
சிலை, மண்டபம் அமைக்க வேண்டும்: வைகோ

தூத்துக்குடி திருநங்கை கொலை வழக்கு: விளாத்திகுளம் நீதிமன்றத்தில் இளைஞர் சரண்
தூத்துக்குடியில் ரூ. 58.65 லட்சம் நலத்திட்ட உதவி அளிப்பு
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் கருடசேவை