வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

கோவில்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

DIN | Published: 12th September 2018 09:27 AM

கோவில்பட்டி இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் சுகாதாரம் மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மையான நிகழ்வுகள் என்ற தலைப்பில் தினமும் ஒவ்வொரு தூய்மை செயல்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு தூய்மையான நிகழ்வுகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுகாதாரம் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இப்பேரணிக்கு பள்ளித் தலைவர் சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். பள்ளி முன்பிருந்து தொடங்கிய இப்பேரணி, கடலையூர் சாலை, பிரதான சாலை வழியாக பள்ளி வளாகம் வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து, சுகாதாரம் பேணுவோம், மழைநீரை சேகரிப்போம் என பள்ளி மாணவர், மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
பேரணியில், பள்ளித் தலைமையாசிரியை இசக்கியம்மாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More from the section

காஷ்மீர் சம்பவத்தில் உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல்
தூத்துக்குடி மாநகரில் பிப்ரவரி 21 மின்தடை
மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கக் கோரி ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம்
குரும்பூரில் புதிய வாரச் சந்தை தொடக்கம்
ஆறுமுகனேரி பிரம்மசக்தி அம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை