புதன்கிழமை 23 ஜனவரி 2019

கோவில்பட்டியில் 2 மூதாட்டிகளிடம் 11 பவுன் நகைகள் பறிப்பு

DIN | Published: 12th September 2018 09:24 AM

கோவில்பட்டியில் இருவேறு இடங்களில் மூதாட்டிகளிடம் 11 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். 
கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மனைவி சீத்தாலட்சுமி(75). உடல்நிலை சரியில்லாத நிலையில், திங்கள்கிழமை இரவு தனது மகள் அனுப்பும் ஆட்டோவில் மருத்துவமனைக்குச் செல்வதற்காக காத்திருந்தாராம். அப்போது, ஆட்டோவில் வந்த சிலர் சீத்தாலட்சுமியை ஆட்டோவில் ஏற்றிச் சென்று, சிறிது நேரத்தில் அவரது வீட்டருகே ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டார்களாம். மயக்கமடைந்த நிலையில் கிடந்த மூதாட்டியைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவரை எழுப்பி விசாரித்தபோது, ஆட்டோவில் அழைத்துச் சென்றவர்கள் தன்னை மயக்கி, தான் அணிந்திருந்த சுமார் 7 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றுவிட்டதாகக் கூறினாராம். இதைத்தொடர்ந்து, சீத்தாலட்சுமியை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மற்றொரு சம்பவம்:  ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (65). இவர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை மயக்கி அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. வள்ளியம்மாள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் கிழக்கு காவல் நிலைய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from the section

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் காயம்


ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் இடைநீக்கம்

ஆறுமுகனேரி பகுதியில் மர்ம காய்ச்சலால் மக்கள் பாதிப்பு
பிப்.10 இல் கோவில்பட்டியில் அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழக மாநில மாநாடு
கயத்தாறில் ஆர்ப்பாட்டம்