புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

சாத்தான்குளத்தில் பாரதியார் நினைவு தினம்

DIN | Published: 12th September 2018 09:25 AM

சாத்தான்குளம் பாரதி இலக்கிய மன்றம் சார்பில்,  மகாகவி பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு,  சாத்தான்குளம் நட்சத்திர அரிமா சங்க முன்னாள் தலைவர் ம.கனகராஜ் தலைமை வகித்தார்.  ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜான்லூயிஸ்,  ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஓ.சு.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதி இலக்கிய மன்ற அமைப்பாளர் ஈஸ்வர் சுப்பையா வரவேற்றார். 
பாரதியார் உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இதில்,  ஓய்வுபெற்ற பள்ளி எழுத்தர் பிரேம்குமார்,  மங்கையர்கரசி, தொழிலதிபர் சே.ஜெயசிங்,  சு.லெ.முருகன், தோப்பூர் ஆலய தர்மகர்த்தா எஸ்.சக்திவேல்,  தமிழ் ஆசிரியர் வீரசிகாமணி,  முத்துக்குமார், முருகன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  பொ.முருகானந்தபாண்டி நன்றி கூறினார்.

More from the section

காஷ்மீரில் வீரமரணமடைந்த சுப்பிரமணியனுக்கு
சிலை, மண்டபம் அமைக்க வேண்டும்: வைகோ

தூத்துக்குடி திருநங்கை கொலை வழக்கு: விளாத்திகுளம் நீதிமன்றத்தில் இளைஞர் சரண்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற பரிசீலனை
தூத்துக்குடியில் ரூ. 58.65 லட்சம் நலத்திட்ட உதவி அளிப்பு
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் கருடசேவை