24 பிப்ரவரி 2019

தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

DIN | Published: 12th September 2018 09:28 AM

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் (2019) தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, தூத்துக்குடி வஉசி கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், சார் ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, ராஜாஜி பூங்கா வரை சென்று நிறைவு பெற்றது. பேரணியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கையில் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியபடியும், வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தபடியும் சென்றனர்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி வட்டாட்சியர் சிவகாம சுந்தரி, தூத்துக்குடி வட்ட தேர்தல் துணை வட்டாட்சியர் ரம்யாதேவி, கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


 

More from the section

திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை
சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்று டிஎஸ்பி பணிக்கு தேர்வான ஏழை மாணவி
வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் உடல்களைப் பெற உறவினர்கள் மறுப்பு: பட்டாசு ஆலை நிர்வாகம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்து இலவச படகு சவாரி செய்த இளைஞர்கள்
திருச்செந்தூரில் நாளை தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்