புதன்கிழமை 16 ஜனவரி 2019

விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம்: காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

DIN | Published: 12th September 2018 09:25 AM

காவலர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பாராட்டினார்.
தமிழ்நாடு காவல்துறையின் மாநில அளவிலான 58 ஆவது மண்டலங்களுக்கு இடையான 2018 ஆம் ஆண்டுக்கான  விளையாட்டுப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் மூன்று நாள்கள் நடைபெற்றது. 
 இதில்,  ஆண்களுக்கான கபடி போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவு காவலர்கள் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.  இதேபோல, பெண்களுக்கான வாலிபால் போட்டியில்,  தூத்துக்குடி காவல் துறையைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்ற அணி மூன்றாவது இடத்தைப்பிடித்தது.
விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடத்தைப் பிடித்தவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், முக்கியஸ்தர்கள் வாகனத்தை பாதுகாப்பாகவும்,  சாதுர்யமாக ஓட்டுவதற்கான கமாண்டோ பயிற்சியில்,  முதலிடத்தைப் பிடித்த தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் சிவாவையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
 

More from the section


பொங்கல் விடுமுறை தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு


பெருங்குளத்தில் நாளை செங்கோல் ஆதீன குருபூஜை விழா

தூத்துக்குடியில் 10 வாகனங்களின் கண்ணாடி உடைப்பு
குரும்பூர் அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு
பாட்டக்கரை கோயிலில் இன்று பொங்கல் விழா