வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

கயத்தாறு அருகே கோயிலில் அன்னதான மண்டபம் திறப்பு

DIN | Published: 19th February 2019 06:53 AM

கயத்தாறை அடுத்த வடக்கு கோனார்கோட்டையில் அன்னதான மண்டபத்தை முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
இங்குள்ள சங்கிலி மாடசாமி திருக்கோயிலில் அன்னதான மண்டபம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவுக்கு ஏ.எம்.மூர்த்தி தலைமை வகித்தார். கருணாஸ் எம்.எல்.ஏ. அன்னதான மண்டபத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அன்னதானத்தை மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர்- தலைவர் ச.செல்வம் தொடங்கிவைத்தார். கோவில்பட்டி நிலவள வங்கித் தலைவர் ரமேஷ்  உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
பின்னர், கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது அனைத்து சமுதாய மக்களின் கோரிக்கையாகும். மத்திய, மாநில அரசுகள் இந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இம்மாதம் 20ஆம் தேதி மதுரையில் முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுடன் அதிமுகவினர் கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. தமிழர்களின் உரிமையைப் பறிக்கக் கூடிய மத்திய அரசோடு இந்தக் கூட்டணி தேவையா என்ற கேள்வி பொதுமக்களிடம் உள்ளது. அதே கேள்விதான் என்னிடத்திலும் இருக்கிறது என்றார் அவர்.

More from the section

தூத்துக்குடி தொகுதி: 2ஆவது நாளிலும் மனு தாக்கல் இல்லை


அதிமுக கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றும்: புதுவை முன்னாள் முதல்வர் என். ரெங்கசாமி

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள்
சாத்தான்குளம் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்கம்


கயத்தாறில் வாகனச் சோதனை: புகையிலைப் பொருள்கள் பறிமுதல்