திங்கள்கிழமை 25 மார்ச் 2019

கோவில்பட்டியில் அந்தியோதயா ரயில் நின்று செல்லக் கோரிக்கை

DIN | Published: 19th February 2019 06:54 AM

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில் நின்று செல்ல வேண்டும் என சமூக நல அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளன. 
மதுரை மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு அடுத்த நிலையில், அதிக வருமாய் கொண்ட ரயில் நிலையம் கோவில்பட்டி. ஏ கிரேடு ரயில்வே நிலையமாக இந்நிலையம் விளங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகின்றனர். 
 கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் விரைவு ரயில்பெட்டிகளில் பொதுப்பெட்டிகளை மேலும் அதிகரிக்க
வேண்டும்.  தாம்பரம் - திருநெல்வேலி, திருநெல்வேலி - தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயில் 
கோவில்பட்டி நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். 
நாகர்கோவில் - சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் வாராந்திர ரயில்களும் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், அண்ணா தொழிற்சங்கம், அகில இந்திய தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு, நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் அமைப்பினர், சமூக நல அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஆகவே, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில், நாகர்கோவில் - சென்னை செல்லும் வாராந்திர ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்றுசெல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கச் செயலர் பழனிசாமி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

More from the section

ஸ்டெர்லைட் ஆலையின் நிலைப்பாடு குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன்?: தமிழிசை கேள்வி
சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு: கனிமொழி பேச்சு
வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு தீர்வு காண முடியாத பாஜக அரசு
தேர்தலில் வாக்களிப்பது குறித்து காதுகேளாதோருக்கு பயிற்சி
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு பயிற்சி