வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

நலவாரியங்களில் பதிவு செய்தவர்கள் ஆதார் எண்ணை இணைக்க அழைப்பு

DIN | Published: 19th February 2019 07:00 AM

தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ளவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளபட்டுள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பாலமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
   தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் உறுப்பினர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பபட்டுள்ளது. தூத்துக்குடி, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 உறுப்பினர்கள் தங்களின் அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்),  எண் 1, விக்டோரியா தெரு, தூத்துக்குடி அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இணைத்துக் கொள்ளலாம்.
மேலும், l‌o‌s‌s‌s‌t‌u‌t‌i​c‌o‌r‌i‌n@‌g‌m​a‌i‌l.​c‌o‌m  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்பி தங்களின் நலவாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from the section

தூத்துக்குடி தொகுதி: 2ஆவது நாளிலும் மனு தாக்கல் இல்லை


அதிமுக கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றும்: புதுவை முன்னாள் முதல்வர் என். ரெங்கசாமி

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள்
சாத்தான்குளம் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்கம்


கயத்தாறில் வாகனச் சோதனை: புகையிலைப் பொருள்கள் பறிமுதல்