வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

பிப்ரவரி 22 மின்தடை  

DIN | Published: 22nd February 2019 06:55 AM

கோவில்பட்டியில் மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணி நடைபெறவிருப்பதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(பிப்.22) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சகர்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:  கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறவிருப்பதை முன்னிட்டு சாலையோரம் உள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணி கோவில்பட்டி நகர், மேற்கு மின் விநியோகப் பிரிவிற்கு உள்பட்ட கோவில்பட்டி பிரதான சாலை பத்மா கிளினிக் முதல் ரகுராம் திருமண மண்டபம் வரை, சீனிவாச அக்ரகாரத் தெரு, தட்சிணாமூர்த்தி கோயில் தெரு மற்றும் ரேவா பிளாஸா தனியார் விடுதி அருகேயுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section

தூத்துக்குடியில் கனிமொழியுடன் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
விளாத்திகுளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டி: முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன்


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்


சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பெளணர்மி பூஜை