24 மார்ச் 2019

ஸ்டெர்லைட் ஆலையை நூறு சதவீதம் மூடுவதே அரசின் நோக்கம்: ஆட்சியர்

DIN | Published: 22nd February 2019 08:30 AM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நூறு சதவீதம் மூடுவதுதான் அரசின் நோக்கம் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என ஸ்டெர்லைட் ஆலைக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆலை தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை கவனித்து வருகிறோம். உயர்நீதிமன்றம் சென்றாலும் சட்டரீதியான போராட்டம் நடத்த தயார் நிலையில் இருக்கிறோம்.
ஆலையில் உள்ள ரசாயன கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், அதனை அரசு அகற்றுவதற்கு உயர்நிலைக் குழு அமைத்தது. 
அந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில் 95 சதவீதம் ரசாயனங்கள் அகற்றப்பட்டு உள்ளன. ஜிப்சம், தாமிரத்தாது மட்டும் உள்ளது. அதையும் முழுவதும் அகற்றி ஆலையை நூறு சதவீதம் மூடுவதுதான் அரசின் நோக்கம் என்றார் அவர்.

More from the section

ஸ்டெர்லைட் ஆலையின் நிலைப்பாடு குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன்?: தமிழிசை கேள்வி
சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு: கனிமொழி பேச்சு
வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு தீர்வு காண முடியாத பாஜக அரசு
தேர்தலில் வாக்களிப்பது குறித்து காதுகேளாதோருக்கு பயிற்சி
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு பயிற்சி