திங்கள்கிழமை 25 மார்ச் 2019

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: கனிமொழி

DIN | Published: 22nd February 2019 08:32 AM

தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி கூறினார்.
திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் உடன்குடி அருகே தண்டுபத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச்செந்தூர் பேரவைத் தொகுதி உறுப்பினருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். 
சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி பங்கேற்றுப் பேசியது: மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறும்.
அதிமுக ஆட்சியில் மக்களுக்கான எந்தவித நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. கடந்த தேர்தலில் பாஜக அறிவித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக, பாஜக அரசால் அவசரகோலத்தில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்றவற்றால் நாடு முழவதும் ஏராளமான சிறு குறுதொழில்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர். இதேபோல மத்திய அரசின் விவசாயத்துக்கு எதிரான நடவடிக்கைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல்களை வாக்குச்சாவடி முகவர்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் இருபது வாக்குகள் வீதம் சேகரித்தாலே நமது வெற்றி உறுதி செய்யப்படும் என்றார் அவர்.
தொடர்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலர் பி.ரமேஷ் நன்றி கூறினார்.

More from the section

குமரி தொகுதியில் பிரியங்கா பிரசாரம்: ஹெச். வசந்தகுமார் தகவல்
திருச்செந்தூர் கோயிலில் சத்ரு சம்ஹார பூஜை: தமிழிசை பங்கேற்பு
"ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்'
தூத்துக்குடி தொகுதி திமுக, பாஜக  வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்


மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு:  திருச்செந்தூரில் எஸ்.பி. ஆலோசனை