செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

ஆறுமுகனேரி பகுதியில் மர்ம காய்ச்சலால் மக்கள் பாதிப்பு

DIN | Published: 22nd January 2019 02:03 AM

ஆறுமுகனேரி ஏ.ஐ.டி.யூ.சி. காலனி, ஜெயின் நகர் பகுதியில் மர்ம காய்ச்சலிலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறுமுகனேரி பேரூராட்சி ஏ.ஐ.டி.யூ.சி. காலனியில் பிரதானத் தெரு, 1 முதல் 5 தெருக்கள், ஜெயின்நகரில் 250 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.  இங்குள்ளவர்கள் அருகிலுள்ள தனியார் தொழிற்சாலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிசெய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு  மூட்டு வலிலியால் நடக்க முடியாத நிலை இருப்பதாக மக்கள் தெரிவித்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். சுகாதாரப் பணியிலும் ஈடுபட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

More from the section

நலவாரியங்களில் பதிவு செய்தவர்கள் ஆதார் எண்ணை இணைக்க அழைப்பு
கோவில்பட்டியில் அந்தியோதயா ரயில் நின்று செல்லக் கோரிக்கை
கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல்.  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வீட்டுமனைப் பட்டா, மருத்துவ உதவி கேட்டு ஆட்சியரிடம் மனு

கயத்தாறு அருகே கோயிலில் அன்னதான மண்டபம் திறப்பு